×

பெண் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த சம்பவம் திருத்தணி ஜி.ஹெச்சில் அறிக்கை அனுப்பி விசாரணை

திருத்தணி: பெண் வயிற்றில் கத்திரிக்கோல் வைத்து தைத்த விவகாரத்தில் அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஒன்றியத்துக்கு உட்பட்ட விகேஆர்.புரம் காலனியை சேர்ந்தவர் பாலாஜி.  காவலாளி. இவரது மனைவி குபேந்திரி, கடந்த 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி திருத்தணி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இதன்பிறகு அவரது வயிற்றில் தையல் போட்டு வீட்டுக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு குபேந்திரிக்கு கடும் வயிற்றுவலி ஏற்பட்டதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு ஸ்கேன் எடுத்துபார்த்தபோது வயிற்றுக்குள் கத்தரிக்கோல் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரை சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்து அறுவை சிகிச்சை மூலம் கத்திரிக்கோல் அகற்றப்பட்டது.

இந்த நிலையில், திருத்தணி அரசு மருத்துவமனையில் மருத்துவர்களின் அஜாக்கிரதை காரணமாக ஏற்பட்ட பாதிப்பு குறித்து மனித உரிமை ஆணையத்தில் குபேந்திரியின் கணவர் பாலாஜி புகார் அளித்தார்.இதையடுத்து வேலூர் மருத்துவ இணை இயக்குனர் கண்ணகி திருத்தணி அரசு மருத்துவமனைக்கு வந்து குபேந்திராவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், உதவி மருத்துவர், செவிலியர் மற்றும் பாதிக்கப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தினார். இதுசம்பந்தமாக அறிக்கையை இயக்குனர் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Rev. ,G.H. , Incident in which a woman was stabbed with scissors in her abdomen Rev. G.H. Report sent and investigated
× RELATED ஊதுபத்தியால் வந்தது வினை வீட்டில் தீப்பற்றி பணம் பொருட்கள் எரிந்து நாசம்