மூதாட்டி வீட்டில் 5 லட்சம் 20 பவுன் கொள்ளை

திருத்தணி: திருத்தணி அருகே பி.சி.என்.கண்டிகையில் பங்காரும்மா(64) என்ற மூதாட்டி மற்றும் அவருடன் படுத்தபடுக்கையாக 90 வயதில் மாமியாரும் வசிக்கின்றனர். இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 9 மணிக்கு பங்காரும்மா, சென்னையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். மூதாட்டியின் மாமியார் வீட்டின் பின்புறம் உள்ள தனியறையில் தூங்கிக் கொண்டிருந்தார்.  

இந்நிலையில் நேற்று மூதாட்டியின் வீட்டு கதவு உடைக்கப்பட்டு திறந்துகிடந்ததாக பங்காரம்மாவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மூதாட்டி விரைந்து வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த ₹5 லட்சத்து இருபதாயிரம் மற்றும் 20 சவரன் நகை, வெள்ளிப்பொருட்கள் கொள்ளைபோனது தெரியவந்தது.

Related Stories: