பெண்ணிடம் செயின் பறிப்பு: பைக் மர்ம நபர்களுக்கு வலை

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பூண்டி கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் குமார். இவரது மனைவி தாரணி (42). இவர் அப்பகுதியில் மகளிர் சுய உதவி குழு தலைவியாக உள்ளார். இவர்களது மகள் பிரதீபா.இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். இந்நிலையில் தாரணி மற்றும் மகள் பிரதீபா ஆகியோர் இருசக்கர வாகனத்தில் திருவள்ளூர் சென்றனர். பிறகு பிரதிபாவின் பள்ளி கட்டணத்தை கட்டிவிட்டு வங்கியில் அடகு வைத்திருந்த செயினை மூட்டிக்கொண்டு மீண்டும் கிருஷ்ணாபுரம் வீட்டுக்கு மகள் பிரதீபா வாகனத்தை ஓட்டச் சொல்லி தாரணி பின்னால் அமர்ந்து கொண்டு சென்றனர்.

புல்லரம்பாக்கம் மாந்தோப்பு அருகே செல்லும் போது பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் தாரணி கழுத்தில் அணிந்திருந்த 8 சவரன் நகையை பறிக்க முயன்றனர். ஆனால் முடியாததால் 3 சவரன் தங்க டாலர் செயின் மட்டும் பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

Related Stories: