இங்கி.யில் முதல் முறையாக தலித் பெண் மேயராக தேர்வு

லண்டன்: இங்கிலாந்தில் ஈலிங் நகரசபை மேயராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தலித் பெண் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்திய வம்சாளியை சேர்ந்த மொகிந்தர் மிதா இங்கிலாந்தில் எதிர்கட்சியாக செயல்படும் தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர். தற்போது ஈலிங் கவுன்சிலில் உள்ள டோர்மர் வெல்ஸ் வார்டில் துணை மேயராக இருக்கும் இவர், லண்டனில் கடந்த 5ம் தேதி நடந்த நகரசபை தேர்தலில் இக்கட்சியின் சார்பில் மேயர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இது குறித்து தொழிலாளர் கட்சி வெளியிட்ட அறிக்கையில், ``கவுன்சிலர் மொகிந்தர் மிதா ஈலிங் நகரசபை மேயராக அடுத்தாண்டு தேர்ந்தெடுக்கப்பட்டதை எண்ணி மிகவும் பெருமைப்படுகிறோம். அவர் வரும் 2022-23ம் ஆண்டில் மேயராக பொறுப்பேற்பார்,’’ என்று கூறப்பட்டுள்ளது.

Related Stories: