கடையம் பகுதியில் உடும்பு, நல்லபாம்பு பிடிபட்டது

கடையம்: கடையம் பகுதியில் வன உயிரினங்கள் உடும்பு, நல்லபாம்பு பிடிபட்டது. கடையம் அருகே மேல மாதாபுரத்தில் உள்ள விநாயகர் கோயிலில் சுமார் 5 அடி நீளமுள்ள நல்லபாம்பு இருப்பதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. கடையம் வனச்சரக உதவி வனப்பாதுகாவலர் ராதை உத்தரவின்படி வனத்துறையினர் நல்லபாம்பை பத்திரமாக பிடித்து வனப்பகுதியில் விட்டனர். மேலும் முதலியார்பட்டியில் லதா என்பவரது வீட்டில் உடும்பு பதுங்கி இருந்தது. வனத்துறையினர் உடும்பை பத்திரமாக பிடித்து ஆம்பூர் பீட் தொந்திகல் சரக பகுதியில் விட்டனர்.

Related Stories: