கோயில் காளை உயிரிழப்பு

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள எதர்லப்பட்டி கிராமத்தில் முத்துமாரியம்மன் கோயில் உள்ளது. இதில் முத்தாகவுண்டர் என்பவர் தர்மகர்த்தாவாக உள்ளார். இவர் தனது காளையை கோயிலுக்கு காணிக்கையாக வழங்கியிருந்தார். அந்த காளையை கிராம மக்கள் பராமரித்து வந்தனர். இந்தநிலையில், நேற்று திடீரென காளை இறந்தது.

இதனை கேட்டு அங்கு திரண்ட கிராம மக்கள் சோகத்தில் மூழ்கினர். பின்னர் காளைக்கு மஞ்சள், குங்குமம், பூசி மாலை அணிவித்து மேளதாளங்கள் முழங்க அனைத்து சடங்குகளும் செய்து ஊர்வலமாக எடுத்து சென்று கோயில் அருகேயே அடக்கம் செய்தனர். இந்த நிலையில் இறந்த காளையுடன் இருந்த மற்றொரு காளை, உடலை அடக்கம் செய்த இடத்தை சுற்றி சுற்றி வந்தது. இதனை பார்த்த கிராம மக்கள் கண்கலங்கினர்.

Related Stories: