குண்டும் குழியுமாக மாறிய அத்திமரப்பட்டி - குலையன்கரிசல் சாலை

ஸ்பிக்நகர்: அத்திமரப்பட்டியில் இருந்து பொட்டல்காடு செல்லும் சாலை பழுதடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அத்திமரப்பட்டியில் இருந்து பொட்டல்காடு வழியாக குலையன்கரிசல், கூட்டாம்புளி, புதுக்கோட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்லும் சாலை கடந்த சில வருடமாக பராமரிக்கப்படாமல் உள்ளது. இதனால் இந்த சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதுடன், இருச்சக்கர வாகனத்தில் செல்வோர் கீழே விழுந்து செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த சாலையில் உள்ள பள்ளங்களில் புழுதிகள் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் மழை நேரங்களில் சகதிகளில் சிக்கி வாகன ஒட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இந்த சாலையின் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான வியாபாரிகள், உப்பள தொழிலாளர்கள், பொதுமக்கள், விவசாயிகள் என பலதரப்பட்ட மக்களும் சென்று வருகின்றனர்.  எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு சாலை பணிகளை விரைந்து தொடங்கிட வேண்டும் என அந்தபகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: