நான் காவல்நிலையம் சென்றதற்கு காரணம் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி தான்; ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: லட்சக்கணக்கான பெண்கள் வாழ்வில் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி ஒளியேற்றி உள்ளது என  விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் 75-வது ஆண்டு விழாவில் முதல்வர் பேசினார்.  மாணவிகளின் தனித் திறமைக்கு கல்லூரியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என பேசினார். மேலும் கல்லூரி சென்ற போது ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி பேருந்து நிலையத்துக்கு வந்து சென்றதை நினைவு கூர்ந்து பேசினார். நான் பள்ளிக்கு போகும்போது, ஸ்டெல்லா மேரிஸ் பேருந்து நிறுத்தத்தில் தான் ஏறுவேன். 29c பேருந்தில் தான் அப்போது ஏறுவேன், சில நாட்களுக்கு முன் கூட அதே பேருந்தில் ஏறி ஆய்வு செய்தேன்.

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி எனது வாழ்வில் மறக்க முடியாத கல்லூரி என கூறினார். ஆகஸ்டு 15, 1947-ல் தொடங்கப்பட்டது தான் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியின் சிறப்பு என கூறினார். கல்லூரி சுவற்றில் திமுக தொண்டர் ஒருவர் சுவரொட்டி ஒட்டியதாக காவல் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டதை நினைவு கூர்ந்தார். நாடக விளம்பரத்திற்காக சென்னை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டினோம்.  ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி சுவரில் போஸ்டர் ஒட்டியதால் போலீசாரிடம் புகார் தரப்பட்டது. நான் காவல்நிலையம் சென்றதற்கு காரணம், இந்த கல்லூரியில் ஒட்டிய போஸ்டர் தான் என பேசினார்.

Related Stories: