சங்கரன்கோவில் தாய் இறந்ததை மறைத்து மகளை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுப்பி வைத்த தந்தை..!

தென்காசி: தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தாய் இறந்ததை மறைத்து தன் மகள்களை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத அனுப்பி வைத்தார் பெரியசாமி-முத்துமாரி தம்பதியின் மகள்கள் வானீஸ்வரி, கலாராணி தனியார் பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகின்றனர். நேற்று முன்தினம் ஆடுமேய்க்கச் சென்ற முத்துமாரி கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை மகள்களிடம் மறைத்த தந்தை தாய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறி மறுநாள் தேர்வு எழுத அனுப்பி வைத்துள்ளார்.தேர்வு முடிந்து வீடு திரும்பும் போது தாய் இறந்தது தெரிய வந்ததும் மாணவிகள் கதறி அழுதது அங்கிருந்தவர்களை கலங்க வைத்தது

Related Stories: