ராமேஸ்வரம் அருகே மீனவ பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை: இறால் பண்ணைக்கு சீல்

ராமேஸ்வரம் அருகே வடகாடு என்ற கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அக்கிராமத்தை சேர்ந்த சந்திரா(45) என்ற மீனவ பெண் காலையில் கடல்பாசி சேகரிப்பதற்காக கடலுக்கு சென்ற நிலையில் மாலை வரை வீடு திரும்பாததால் அச்சமடைந்த கணவரும் அவரது உறவினர்களும் போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இதையடுத்து வடகாடு காட்டுப்பகுதியில் போலீசாரும் கிராம மக்களும் தேடி சென்றபோது காட்டுப்பகுதியில் மீனவ பெண் அரைநிர்வாணமாக எரிந்த நிலையில் கிடந்ததையடுத்து அதிர்ச்சியடைந்தனர். அப்பகுதியில் செயல்பட்டுவரும் இறால் பண்ணையில் வேலை செய்யும் போலீசார் விசாரணை நடத்தியபோது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீவைத்து கொளுத்தினர். இறால் பண்ணையில் பணிபுரிந்த 6 வடமாநில இளைஞர்கள் மீதும் சரமாரியாக தாக்குதல் நடத்தினர். பின்னர் அவர்களை அங்குள்ள அறையில் பூட்டிவைத்தனர். இதையடுத்து போலீசார் மீனவ பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்ப முயன்றனர்.

ஆனால் உடலை எடுக்க எதிர்ப்பு தெரிவித்த கிராம மக்கள் போலீசாரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அக்கிராம மக்களிடம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் உடலை எடுக்க அனுமதித்தனர். கிராம மக்களால் அடித்து அறையில் பூட்டிவைக்கப்பட்ட இளைஞர்களை மீட்ட போலீசார் சிகிக்சைக்காக மதுரைக்கு அனுப்பிவைத்தனர்.

முதற்கட்ட விசாரணையில் மீனவ பெண்ணை காட்டு பகுதியில் வைத்து இறால் பண்ணையில் வேலை பார்க்கும் ஒடிசாவை சேர்ந்த இளைஞர்கள் கஞ்சா போதையில் கூட்டுப்பலியால் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. பின்னர் சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தில் பெட்ரோல் ஊற்றி எரித்ததும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை கிடைக்க வேண்டுமென்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பெண்ணின் உறவினர்கள் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த போராட்டத்தின்போது போராட்டக்காரர்கள் திடீரென சாலையில் டயரை எரித்து தங்கள் எதிர்ப்பை தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான படையினர் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

இந்நிலையில் வடமாநில இளைஞர்கள் பணிபுரிந்த இறால் பண்ணையை  மீன்வளத்துறையினர் ஆய்வு செய்தபோது அந்த பண்ணை எந்த ஒரு முறையான அனுமதி பெறாமல், உரிய ஆவணங்கள் இன்றி செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து இறால் பண்ணைக்கு சீல் வைத்து மீன்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories: