போருக்கான ஒத்திகையா?.. மீண்டும் ஏவுகணை சோதனை நடத்திய வடகொரியா: உலக நாடுகள் குழப்பம்..!

பியோங்கியங்: வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய 3 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது. அமெரிக்காவின் பொருளாதார தடை, ஐநா எச்சரிக்கை, உலக நாடுகளின் எதிர்ப்பு என்று எதையும் கண்டும் அஞ்சாமல், தளராமல் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அமெரிக்கா, தென் கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுடன் வட கொரியா மோதல் போக்கை கொண்டுள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றதில் இருந்து இதுவரை, வடகொரியா 14 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

வடகொரியாவின் ஆயுத தொழில்நுட்பங்களும், அணு ஆயுத பலம் பெறும் முயற்சியும் உலக நாடுகளின் கவலையை அதிகரிக்க செய்துள்ளது. இந்நிலையில் வடகொரியா அணு ஆயுதங்களை தாங்கி செல்லக்கூடிய 3 ஏவுகணைகளை ஏவி சோதனை நடத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்க அதிபர் பைடன் ஜப்பான் பயணத்தை முடித்துக்கொண்டு புறப்பட்ட சிலமணி நேரத்தில் ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வருகையின் போது வடகொரியா ஏவுகணை சோதனை நடத்தும் என ஏற்கெனவே தகவல் வெளியானது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் வடகொரியா ஏவுகணை சோதனையை தொடர்ந்து நடத்தி வருகிறது.வட கொரியா விரைவில் அணு ஆயுத சோதனையை மீண்டும் தொடங்கும் என்பதையே இந்த அறிவிப்பு குறிப்பதாக அமெரிக்கா, தென் கொரியா நாடுகள் குற்றம் சாட்டியுள்ளன.

Related Stories: