ஊர்விட்டு ஊர்வந்து இளம்பெண்ணை காதலித்த வாலிபருக்கு செருப்பு மாலை

பில்வாரா: ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் கல்வெலியா அடுத்த பஸ்தி பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை, பக்கத்து ஊரைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் காதலித்து வந்துள்ளார். இதையறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள், அந்த வாலிபரை பிடித்து பிணைக்கைதியாக வைத்தனர். பின்னர் அந்த வாலிபரின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுத்து, தங்கள் மகனை அழைத்துச் செல்லும்படி கூறினார். ஆனால் அந்த வாலிபரின் குடும்பத்தினர் அங்கு வரவில்லை. அதன்பிறகு அந்த இளைஞனின் தலைமுடியை சிலர் வெட்டினர். பின்னர் முகத்தில் கரியை பூசினர். சிலர் தாக்கினர்.

பின்னர் செருப்பு மாலை அணிவித்து கிராமம் முழுவதும் ஊர்வலமாக அழைத்து சென்றனர். இந்தச் சம்பவத்தை அந்த பெண்ணின் குடும்ப உறுப்பினர்கள், தங்களது கிராம மக்களுடன் இணைந்து செய்தனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த இளைஞரை மீட்டு வீட்டிற்கு அழைத்து வந்தனர். இவ்விவகாரம் தொடர்பாக 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories: