வாஷிங்டன்: அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூடுதால் எனது இதயத்தை நொறுக்கிய சம்பவம் சோகமாக உள்ளதாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் உருக்கத்துடன் கூறினார். அமெரிக்காவின் டெக்சாஸ் அடுத்த உவால்டே ராப் தொடக்கப் பள்ளியில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 19 குழந்தைகள், 2 ஆசிரியைகள் என 21 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், துணை அதிபர் கமலா ஹாரிஸ் கூறுகையில், ‘டெக்சாஸ் பள்ளியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவம், எனது இதயத்தை நொறுக்கியுள்ளது. இதுபோன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் போதும்.