கோவை கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

கோவை :  கோவை அரசு கலை கல்லூரியில் உள்ள பல்வேறு பிரச்னைகளை தீர்க்க வலியுறுத்தி மாணவர்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை அரசு கலை கல்லூரியில் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில், கல்லூரி மாணவர்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்க வந்தனர்.

மனு அளிக்க கல்லூரியிலிருந்து திரளாக வந்த மாணவர்கள் அவர்களது கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பியபடி கலெக்டர் அலுவலகம் வந்தனர். கோவை அரசு கல்லூரியில் மாணவர்களின் நலன் மற்றும் கல்லூரி மேம்பாட்டிற்காக ஒதுக்கப்படும் யுஜிசி நிதி போன்றவற்றில் முறைகேடு நடந்து வருவதாகவும், முறைகேடுகளில் ஈடுபடும் நபர்கள் மீது கமிட்டி அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கல்லூரியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் எனவும், கோரிக்கைகளுக்கு மாவட்ட கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மாணவர்கள் கேட்டுக்கொண்டனர்.

Related Stories: