வலங்கைமானில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கும் பத்திரப்பதிவு அலுவலகம்-புதிதாக கட்டித்தர மக்கள் கோரிக்கை

வலங்கைமான் : வலங்கைமானில் பழுதடைந்த கட்டிடத்தில் இயங்கி வரும் பத்திர பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர் .

திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வடக்கு அக்ரஹாரம் பகுதியில் பத்திரப்பதிவு அலுவலகம் செயல்பட்டு வருகின்றது.இவ் பத்திரப்பதிவு அலுவலகம் சுமார் 100 ஆண்டு பழமையான கட்டிடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகிறது. திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவிற்கு உட்பட்ட எழுபத்தி ஒரு வருவாய் கிராமங்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுகாவிற்கு உட்பட்ட சில பகுதிகள் ஆகியவற்றிட் காண பத்திரப்பதிவு இங்கு செய்யப்பட்டு வருகிறது..

மேலும் அரசின் சிறப்பு பதிவேடுகளும் இங்கு பாதுகாக்கப்பட்டு வருகின்றது .ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் அரசுக்கு வருவாய்ஈட்டி தரும் பத்திர பதிவு அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளாகஅதிமுக ஆட்சியில் பொதுமக்கள் விடுத்த கோரிக்கை ஏற்கப்படவில்லை.இந்நிலையில் கட்டிடத்தில் ஆங்காங்கு விரிசல் ஏற்பட்டு தண்ணீர் கசியும் சூழ்நிலை உள்ளது.

இங்கு உள்ள பழமையான ஆவணங்களும் பழுதடையும் சூழல் ஏற்பட்டுள்ளதுஇந்நிலையில் பழுதடைந்த பத்திரப்பதிவு அலுவலக கட்டிடத்தை இடித்துவிட்டு தற்போது க்கு ஏற்ப நவீன வசதிகளுடன் புதிய பத்திரபதிவு அலுவலகம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். புதிய பத்திரப்பதிவு அலுவலக கட்டிடம் கட்டும் வரை தற்காலிகமாக மாற்று இடத்தை தேர்வு செய்து அதில் பத்திரப்பதிவு அலுவலகம் அச்சமின்றி பணியாளர்கள் செயல்படும் விதமாக ஏற்பாடு செய்திட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: