நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடந்தால் கடும் நடவடிக்கை-துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி எச்சரிக்கை

கலசப்பாக்கம் : நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடப்பது உறுதி செய்யப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி எச்சரித்தார்

துரிஞ்சாபுரம் ஒன்றியம் கருந்துவாம்பாடி கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்எல்ஏ சரவணன் தலைமை தாங்கினார். மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் பாரதி ராமஜெயம், ஒன்றியக்குழு தலைவர் தமயந்தி ஏழுமலை, முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் வி.பி. அண்ணாமலை முன்னிலை வகித்தனர். ஊராட்சித் தலைவர் தமிழ்ச்செல்வன் வரவேற்றார்.

 நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர், ‘‘விவசாயிகளின் நலன் கருதி நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுகிறது. எனவே, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். முறைகேடுகள் நடப்பது உறுதி செய்யப்பட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று எச்சரித்தார்.

Related Stories: