உசிலம்பட்டி அருகே 750 கிலோ குட்கா பறிமுதல்: 5 பேர் கைது

மதுரை: மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே முத்துபாண்டிபட்டி விலக்கில் 750 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது. போலீஸ் நடத்திய வாகன சோதனையின்போது 67 மூட்டைகளில் குட்கா கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2 கார்களில் குட்கா கடத்தி வந்த ஜெயவீரன், ராமசந்திரன், விக்னேஷ், அம்பரீஷ், சங்கர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 

Related Stories: