மங்களூருவில் இடிக்கப்பட்ட மசூதி பகுதியில் கோவில் அம்சங்கள் இருப்பதாக இந்துத்துவா அமைப்பினர் புதிய சர்ச்சை : 144 தடை உத்தரவு

மைசூர் : கர்நாடகாவில் ஹிஜாப் மற்றும் ஹலால் பிரச்சனையைத் தொடர்ந்து கோவிலின் மீது மசூதிக் கட்டப்பட்டு இருப்பதாக இந்துத்துவா அமைப்புகள் புதிய சர்ச்சையை கிளம்பியுள்ளன. மங்களூரில் உள்ள மாலலி என்ற இடத்தில் கேரள முறைப்படி கட்டப்பட்ட மதானி ஜும்மா மசூதியின் ஒரு பகுதி புனரமைப்பு பணிக்காக மசூதி நிர்வாகத்தினரால் இடிக்கப்பட்டது. இந்த புனரமைப்பு பணியின் போது, அதில் இந்து கோவில் இருந்ததற்கான அம்ஸங்கள் காணப்படுவதாக விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் உரிமைக் கோரினர். 2 வாரங்களுக்கு முன்பு மங்களூரு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த அந்த அமைப்பினர் மசூதி அமைந்துள்ள நிலம் கோவில் நிலம் என்று கூறி தடையாணை பெற்றனர்.

மாலலி பகுதியில் உள்ள ஆஞ்சிநேயர் கோவிலில் குறி கேட்கும் பூஜையை விஷ்வ இந்து பரிஷத் அமைப்பினர் நடத்தி வருவது சர்ச்சையை கிளப்பியுள்ளது. மசூதி உள்ள இடத்தில் கோவில் உள்ளதா ? இல்லையா ?என்பதைக் கண்டறிய கேரளாவில் இருந்து கோபால் கிருஷ்ணா என்ற பூசாரியை வரவழைத்து குறி கேட்டு வருகின்றனர். ஏற்கனவே ஹிஜாப் பிரச்சனை ஹலால் இறைச்சி பிரச்சனையை கிளப்பிய இந்து அமைப்பினர் கோவில் வளாகங்களில் இஸ்லாமியர்களுக்கு கடை வைக்க அனுமதி மறுத்தும் பிரச்சனை செய்தனர். தற்போது தொல்லியல் துறை, அரசு , நீதிமன்றம் ஆகியவற்றை மதிக்காமல் பூசாரியை அழைத்து வந்து குறி கேட்கும் பூஜை நடத்தி வருவது பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் கிளப்பி வருகிறது. அந்த பகுதியில் 1பதற்றம் நிலவுவதால் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. 

Related Stories: