துப்பாக்கிச் சூட்டில் 18 பள்ளி குழந்தைகள் பலி...ஆயுத தடைச் சட்டத்தை கடுமையாக்கும் நேரம் இது என அமெரிக்க அதிபர் பேச்சு!

வாஷிங்டன் : அமெரிக்காவில் சமீபகாலமாக கல்விக் கூடங்களில் அதிகரித்து வரும் துப்பாக்கிக் கலாச்சாரம் ஆயுத சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டிய அவசியத்தை உணர்த்துவதாக அதிபர் ஜோபிடன் தெரிவித்துள்ளார். டெக்சாஸ் மாகாணத்தில் பள்ளி ஒன்றில் இளைஞர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 18 குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர். இது குறித்து வாஷிங்டன் டி.சி.யில் பேசிய அதிபர் ஜோபிடன், பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்ட தகவலை அறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்து இருப்பதாக கூறினார். இது போன்ற சம்பவங்களால் நாடு முழுவதும் ஆயுதங்கள் தடை சட்டம் கடுமையாக்கப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு இருப்பதாக பிடன் கூறினார்.

மேலும் பேசிய அவர், ஏன் இந்த படுகொலைகள்? இது போன்ற படுகொலைகளுடன் வாழ நாம் ஏன் தயாராக இருக்கிறோம் ? இது போன்ற சம்பவங்கள் ஏன் நடைபெறுகின்றன? இதை சமாளிப்பதற்கும், ஆயுத கடத்தல் காரர்களை எதிர்ப்பதற்கும் துணிச்சல் நமக்கு ஏன் இல்லை. பெற்றோர் தற்போது அனுபவித்து வரும் வலியை ஆயுதங்களுக்கு எதிரான செயலாக மாற்ற வேண்டிய நேரம் இது,என்றார்.பள்ளிக் குழந்தைகள் 18 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி தனது இதயத்தை தூள் தூள்ளாக்கி இருப்பதாகவும் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரீஸ் தெரிவித்துள்ளார். இது போன்ற துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இனிமேலும் நிகழாமல் தடுக்க துணிச்சலான முடிவுகளை பிடன் அரசு எடுக்கும் என்றும் கமலா ஹாரீஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.  

Related Stories: