முதலமைச்சர் அலுவலகத்தில் தமிழக இளைஞர்களுக்கு வேலை : இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

சென்னை: முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று அரசுப் பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.தமிழக அரசின் சிறப்பு செயலாக்க திட்டத்துறை சார்பில், முதல்வரின் புத்தாய்வு திட்டம் செயல்படுத்தபடவிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் தமிழகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் இரண்டு ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் முதல்வர் அலுவலகம், தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணியில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முதல்வரின் இந்த புத்தாக்க திட்டத்திற்காக நடப்பாண்டில் 30 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட உள்ளது. மேலும், இந்த திட்டத்துக்கு ரூ.5 கோடியே 66 லட்சத்து 54 ஆயிரத்து 600 ஒதுக்கப்படும் என்று தெரிகிறது. இத்திட்டத்திற்காக திருச்சி பாரதிதாசன் பல்கலையுடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிலையில், முதலமைச்சரின் புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று, அரசுப் பணிகளில் அமர விரும்பும் இளைஞர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. //www.bim.edu/Tncmpf எனும் பாரதிதாசன் பல்கலைக்கழக இணையதளத்தில் இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 22-30 வயது

வயது தளர்வு :எஸ்சி/எஸ்டி : 35 வயது வரை

                           பிசி/ எம்பிசி : 33 வயது வரை

2 ஆண்டு கால ஊக்க ஊதியம் : ரூ.65,000+ ரூ.10,000(அல்லோவன்ஸ்)

கல்வி தகுதி : தொழில்முறை படிப்புகளில் இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பு அல்லது கலை/அறிவியலில் முதுகலைப் பட்டப்படிப்பில் முதல் வகுப்பு; தமிழ் அறிவு கட்டாயம்

விண்ணப்பிக்க கடைசி நாள் : ஜூன் 10ம், தேதி!!

Related Stories: