செஸ்ஸபிள் மாஸ்டர் தொடர் : இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா

சென்னை : செஸ்ஸபிள் மாஸ்டர் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில் நெதர்லாந்து வீரர் அனிஷ் கிரியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பிரக்ஞானந்தா. செஸ்ஸபிள் மாஸ்டர்  தொடரில்  முதல் முறையாக இந்தியர் ஒருவர் இறுதிப்போட்டிக்கு முன்னேறி சாதனை நிகழ்த்தியுள்ளார்.  இறுதி ஆட்டத்தில் சீன வீரரும் உலக தரவரிசையில் இரண்டாம் இடத்தில் இருப்பவரும், அரையிறுதியில் கார்ல்சனை வீழ்த்தியவருமான டிங் லைன் (Ding Liren) - யை எதிர்த்து பலப்பரீட்சை நடத்தவுள்ளார்.

Related Stories: