பைக் மீது லாரி மோதி மாணவன் பரிதாப பலி

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் சரத்பாபு. கூலித்தொழிலாளி. இவரது மகன் சிவனேசன்(14), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று மாலை அருகில் உள்ள மைதானத்தில் கால்பந்து விளையாடுவதற்காக பைக்கில் வண்டலூர் - மீஞ்சூர் வெளிவட்ட சாலை சர்வீஸ் சாலையில் சென்றுகொண்டிருந்தான். அப்போது பின்னால் வந்த லாரி பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சிவனேசன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானான். புகாரின்படி பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்துக்கு காரணமான லாரி டிரைவர் சிவ மணிகண்டனை கைது செய்தனர். சிறுவன் இறந்ததால் ஆத்திரத்தில் அந்த லாரியின் கண்ணாடிகளை அப்பகுதி மக்கள் கல்லால் அடித்து நொறுக்கினர்.

Related Stories: