கும்மிடிப்பூண்டி பஞ்சாயத்துகளில் கலைஞரின் வேளாண்மை வளர்ச்சி திட்டம் துவக்கம்: டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ பங்கேற்பு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மேலக்கழனியில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தை டி.ஜெ.கோவிந்தராஜன் எம்எல்ஏ துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் துறை சார்பில் ஊராட்சி தலைவர் பத்மஜா கவுரிசங்கர் தலைமை வகித்தார். மாவட்ட கவுன்சிலர் ராமஜெயம், திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் எம்.எல்.ரவி, கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் வாசுதேவன், ஊராட்சி மன்ற தலைவர்கள் நமச்சிவாயம், வீரன், ஒன்றிய கவுன்சிலர் மெய்யழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டி.ஜெ.கோவிந்தராஜன் கலந்துகொண்டு கலைஞரின் வேளாண்மை திட்டத்தை துவக்கிவைத்து திட்டத்தின் சிறப்பம்சங்களையும் தமிழக அரசின் திட்டங்கள் குறித்தும் பேசினார்.

இதையடுத்து விவசாயிகளுக்கு கை தெளிப்பான், விசை தெளிப்பான், கரையோரம் விதைக்க பயிறுகள், காய்கறிவிதை, பழ விதை, தென்னைமரம், உயிரி உரம் ஆகியவற்றை வழங்கினார். இதேபோல், பெரிய ஓபுளாபுரத்தில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி, கும்மிடிப்பூண்டி கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் கி.வே.ஆனந்தகுமார் ஆகியோர் தலைமையிலும், ஊராட்சி தலைவர் செவ்வந்தி மனோஜ், மாவட்ட பிரதிநிதி காளத்தி, ஒன்றிய கவுன்சிலர்கள் மணிமேகலை கேசவன், ஜோதி, அமலா சரவணன், ஹரிபாபு, துணை தலைவர் இன்பவள்ளி கஜேந்திரன், வார்டு உறுப்பினர் மணல் ராஜா, மீசைராஜா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க நிகழ்வில் விவசாயிகளுக்கு விவசாய உதவி உபகரணங்களை மாவட்ட ஊராட்சி தலைவர் கே.வி.ஜி.உமா மகேஸ்வரி வழங்கினார்.

மேலும் எளாவூரில் ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார் தலைமையிலும், ஊராட்சி தலைவர் வள்ளி முருகேசன் முன்னிலையிலும், ஆரம்பாக்கத்தில் ஊராட்சி தலைவர் தனசேகர் தலைமையிலும், துணை தலைவர் சிலம்பரசன், ஊராட்சி செயலாளர் முரளி முன்னிலையிலும் சுண்ணாம்பு குளத்தில் ஊராட்சி தலைவர் எஸ்.எம்.ரவி தலைமையிலும் எஸ்.ஆர்.கண்டிகையில் ஊராட்சி தலைவர் சி.எம்.ஆர்.ரேணுகா முரளி, ஒன்றிய கவுன்சிலர் ஜெயச்சந்திரன் தலைமையிலும், நேமளூர் திமுக இலக்கிய அணி புரவலர் ஜி.மனோகரன் தலைமையிலும், ஊராட்சி தலைவர் கோவிந்தம்மாள், ஒன்றிய கவுன்சிலர் சிவா முன்னிலையிலும், புது கும்மிடிப்பூண்டியில் ஊராட்சி தலைவர் அஷ்வினி சுகுமாறன் தலைமையிலும், துணை தலைவர் எம்.எல்லப்பன், ஊராட்சி செயலாளர் சிட்டிபாபு, ஒன்றிய கவுன்சிலர்கள் மதன்மோகன், சீனிவாசன் முன்னிலையில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட துவக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

Related Stories: