சதுரங்க போட்டியில் இளம் வயதில் உலக சாம்பியனை வென்று வேலம்மாள் மாணவன் சாதனை

திருவள்ளூர்: இணையம் வழியாக இளம் சதுரங்க போட்டியாளர்கள் பங்கு பெற்ற விரைவு போட்டியில் முகப்பேர் வேலம்மாள் முதன்மை பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் கிராண்ட் மாஸ்டர் ஆர்.பிரக்ஞானந்தா உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனுடன் திறமையாக விளையாடி 2வது வெற்றியை பதிவு செய்தார். தொடர்ந்து பல சுற்றுகளில் வாகை சூடிய இவர் 5வது சுற்றில் கார்ல்சனை விஞ்சினார். அவரது மதிப்பீடு எண்ணிக்கையை 12 புள்ளிகளுக்கு கொண்டு சென்று தலைமை இடத்தில் 5வது இடத்தை பெற்றார். இவ்வாறு 3 மாதங்களில் பிரக்ஞானந்தா இந்த ஆண்டு 2வது முறையாக நார்வே உலக சாம்பியனை திகைக்க வைத்தார். மேலும் அவர் பிப்ரவரியில் ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸில் 8 சுற்றில் வெற்றி பெற்றார். இதுவரை நடந்த போட்டியில் நார்வே சதுரங்க வீரரை எதிர்த்து வெற்றி பெற்ற 3வது இந்தியர் என்ற சிறப்பையும் பிரக்ஞானந்தா பெற்றுள்ளார். அவரது மகத்தான வெற்றியை பள்ளியின் தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் மற்றும் முதல்வர், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

Related Stories: