கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்

திருவள்ளூர்: காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய பொது மேலாளர் ஜெய்குமார் வௌியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் 7 கால்நடை மருத்துவ ஆலோசகர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளது. இக்காலி பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட அரசு அனுமதி அளித்துள்ளது. தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் பணியாற்ற விருப்பம் உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர்கள், தங்களின் முழு விபரங்களுடன் உரிய பட்டப்படிப்பு, கால்நடை மருத்துவ ஆணை சான்றிதழ்களுடன் வரும் ஜூன் 1ம் தேதி காலை 11 மணிக்கு காஞ்சிபுரம் - திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய தலைமை அலுவலகம், அயன்புரம், சென்னை - 23ல் நடைபெறும் நேரடி நியமன தேர்வில் கலந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: