பறிமுதல் வாகனங்கள் தீயில் எரிந்து நாசம்

பூந்தமல்லி: பூந்தமல்லி அடுத்த சென்னீர்குப்பத்தில் போக்குவரத்து புலனாய்வு காவல் நிலையம் உள்ளது. இதையொட்டிய பகுதியில் சாலையோரத்தில் விபத்தில் சிக்கி பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதன் அருகிலேயே குப்பைகளும் கொட்டப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று பிற்பகல் அங்கு குவிக்கப்பட்டிருந்த குப்பை திடீரென தீப்பிடித்து எரிந்தது. பின்னர் அந்த தீ அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் பரவியது. இதில் பைக், வேன், ஆட்டோ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வாகனங்களில் தீப்பற்றி எரிய தொடங்கியது. தகவலறிந்த பூந்தமல்லி, மதுரவாயல் பகுதி தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் பல வாகனங்கள் முற்றிலும் எரிந்து சேதமானது.

Related Stories: