நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு செய்த 2 பேர் கைது

சென்னை: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின்கீழ் இயங்கும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் வேலூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நெல்கொள்முதல் செய்ததில் முறைகேடு நடந்தது தொடர்பாக குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கடந்த 4ம் தேதியன்று வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

அதன்படி வேலூர் மாவட்டத்தில் சிபிசிஐடி போலீசார் வழக்குபதிவு செய்து நேற்று நெல் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்து அரசிற்கு நஷ்டம் ஏற்படுத்திய மகேஷ் (43)  கைது செய்யப்பட்டார்.மேலும் திருவண்ணாமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு சம்பந்தமாக நெல் கொள்முதல் செய்ததில் முறைகேடு செய்து அரசிற்கு நஷ்டம் ஏற்படுத்திய திருநெல்வேலி, மண்டல மேலாளர் கோபிநாத் (45) கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

Related Stories: