பஞ்சப்பள்ளி அருகே சுடுகாடு கேட்டு கிராம மக்கள் மறியல்: போலீசார், அதிகாரிகள் சமரசம்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த பஞ்சப்பள்ளி பெரியானூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகினறனர். இப்பகுதி மக்கள் அனைவரும் கூலி வேலைக்கு சென்று வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு சுடுகாடு இல்லாததால் கிராமத்தில் இறப்பவர்களின் உடல்களை சாலையோரம் மற்றும் கிராமங்களில் ஆங்காங்கே அடக்கம் செய்து வருகின்றனர். பலமுறை சுடுகாடு கேட்டு கோரிக்கை வைத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் ஆவேசமடைந்த கிராமத்தைச் சேர்ந்த 60க்கும் மேற்பட்ட மக்கள் இன்று காலை சுமார் 9.45மணியளவில் மாரண்டஅள்ளி- பஞ்சப்பள்ளி சாலையில் பெரியானூர் கிராமத்திற்கு செல்லும் வழியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பஞ்சப்பள்ளி போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதனால் சமாதானமடைந்த மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: