வழிப்பறி திருடர்கள் 3 பேர் கைது

அம்பத்தூர்: வாலிபரிடம் பைக், செயின் பறித்த திருடர்கள் மூன்று பேர் சிக்கினர். சென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் நேதாஜி(45). இவர் மதுரவாயலில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றார். கடந்த 19ம் தேதி இரவு மதுரவாயலில் இருந்து வீட்டுக்கு கிளம்பினார். அம்பத்தூர் பகுதியில் வந்தபோது அவரது பைக்கை 3 பேர் மறித்து, கத்தியை காட்டி மிரட்டி நேதாஜியிடம் இருந்து செல்போன், பைக்கை பறித்துக் கொண்டு தப்பிச்சென்றுவிட்டனர்.

இதுபற்றி நேதாஜி கொடுத்த புகாரின்படி, அம்பத்தூர் ஆய்வாளர் ராமசாமி வழக்குபதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தார். இந்த நிலையில், நேற்றுமுன்தினம் அம்பத்தூர் கங்கையம்மன் நகரில் பதுங்கியிருந்த மேனாம்பேடு பகுதியை சேர்ந்த மணிகண்டன்(28), யுவராஜ்(32), கார்த்திக்(21) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இவர்கள்தான் நேதாஜியிடம் பைக் பறித்து சென்றவர்கள் என்று தெரிந்தது. அவர்களிடம் இருந்து பைக்கை கைப்பற்றினர். பின்னர் அவர்களை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

Related Stories: