2 குழந்தைகளுடன் தாய் தற்கொலை

மதுரை: குடும்ப பிரச்னை காரணமாக தாய் தனது 2 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். மதுரை மாவட்டம், மேலூர் அருகே முத்துப்பட்டியை சேர்ந்தவர் சதீஸ்குமார் (35). இவரது மனைவி நித்யா (25). இவர்களது குழந்தைகள் ரச்சனா (4), சுந்தரி (2). சதீஸ்குமார் கத்தப்பட்டி சுங்கச்சாவடி அருகே டீக்கடை நடத்தி வருகிறார். கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மனவேதனை அடைந்த நித்யா, முத்துப்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் தனது 2 பெண் குழந்தைகளுடன் நேற்று குதித்து தற்கொலை செய்து கொண்டார். மேலூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு 3 பேரின் உடல்களையும் மீட்டனர். இச்சம்பவம் குறித்து மேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இரண்டு குழந்தைகளுடன் தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மேலூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: