இந்தியா- அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு நம்பிக்கை அடிப்படையிலானது: குவாட் அமைப்பு மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

டோக்கியோ: இந்தியா- அமெரிக்கா இடையேயான ஒத்துழைப்பு நம்பிக்கை அடிப்படையிலானது என்று பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவித்திருக்கிறார். ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற குவாட் அமைப்பு மாநாட்டில் பங்கேற்ற பின் பிரதமர் மோடி பேட்டியளித்தார். அப்போது பேசிய பிரதமர், இன்று நடைபெற்ற குவாட் மாநாடு ஆக்கபூர்வமானதாக, பயனுள்ளதாக இருந்தது. இரு நாடுகளின் பொதுவான நலன்களும், விழுமியங்களும் இரண்டுக்கும் இடையிலான உறவு பலப்படுத்தி உள்ளது. இந்தோ - பசுபிக் பிராந்தியம் தொடர்பாகவும், இந்தியா - அமெரிக்கா இடையே ஒருமித்த கருத்து நிலவுகிறது என்று குறிப்பிட்டார்.  

இந்தோ - பசுபிக் பிராந்திய நாடுகளின் பொது நலன்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் வேகமடையும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா- அமெரிக்கா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பு, மக்கள் இடையேயான தொடர்பால் இரு நாட்டு உறவு சிறப்பு பெறுகிறது. இந்தியா- அமெரிக்கா இடையே வர்த்தகம் மற்றும் முதலீடுகளும் சீராக அதிகரித்து வந்தபோதிலும் மேலும் வளர வாய்ப்புள்ளது. அமெரிக்க முதலீட்டு ஊக்குவிப்பு ஒப்பந்தம் அமலுக்கு வந்ததும் இரு நாடுகளுக்கும் இடையே முதலீடு அதிகரிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.

Related Stories: