×

டிப்ஸ்... டிப்ஸ்... டிப்ஸ்...

* தயிர் நீண்ட நேரம் புளிக்காமல் இருக்க இஞ்சியின் தோலை சீவி விட்டு கொஞ்சம் தட்டி தயிரில் போட்டால் புளிக்கவே புளிக்காது.

* காய்கறிகளை சமைக்கும்போது அவற்றில் பச்சை நிறம் போகாமலிருக்க, நறுக்கியதும் உப்பு கலந்த வெந்நீரில் சிறிது நேரம் வைத்துவிட்டுப் பிறகு சமைக்கலாம் நிறம் மாறாது.

* மெழுகுவர்த்தி ஸ்டாண்டினுள் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பதற்கு முன்பாக கொஞ்சம் எண்ணெய் தடவி வைத்து விடுங்கள். மெழுகு எரிந்து முடிந்ததும் அதை நீக்குவது சுலபமாக இருக்கும்.

* பாகற்காயில் உள்ள கசப்பு போக சிறிது உப்பு சேர்த்து பிசைந்து 5 நிமிடம் வைத்துவிட்டு பிறகு கழுவி விட்டு சமைத்தால் கசப்புத் தன்மை குறைவாக இருக்கும்.

* விளக்கு போன்ற பித்தளை பாத்திரங்களை புளி சேர்த்து தேய்ப்பதற்கு பதில் எலுமிச்சைச் சாறை பாத்திரம் தேய்க்கும் பொடியுடன் சேர்த்து  தேய்த்தால் எண்ணெய் பிசுக்கு மறைந்து பளபளப்பாக மாறிவிடும்.

* வாழைக்காய் நறுக்கும்போது கறையாகும், இதனை தடுக்க சிறிது எண்ணெய் பூசிக்கொண்டால் கறை ஏற்படாது. பூக்களை கவரில் வைப்பதை விட ஒரு டைட் டப்பாவில் போட்டு வைக்கலாம்.

* பல்லிகள் அதிகம் வராமல் தடுக்க; கடுக்காயைத் தூள் செய்து பொடித்த கற்பூரத்தை சம அளவில் கலக்கவும். இதில் ஒரு தேக்கரண்டிக்கு ஒரு டம்ளர் தண்ணீர் என்ற விகிதத்தில் தேவையான அளவில் கலந்து, வீட்டைக் கழுவிய பிறகு ஆங்காங்கே ஜன்னல்கள், கதவுகள் ஓரமாகத் தெளித்தால் பல்லிகள் நடமாட்டம் வெகுவாகக் குறையும்.

* பட்டுச் சேலைகளைத் துவைக்கும்போது அலசும் நீருடன் சிறிது எலுமிச்சைச் சாறு கலந்து கொண்டால் சாயம் போகாது; மங்காது. பட்டுச்சேலையும்
பளிச்சிடும்.

* வெள்ளிப்பாத்திரங்களில் கருமை படராமல் தடுக்க, அவற்றை அடுக்கி வைக்கும்போது இடையிடையே கற்பூர வில்லைகளையும் போட்டு வைக்க வேண்டும்.

* மருதாணியால் ஆடையில் ஏற்படும் கறை போக, அதை வெதுவெதுப்பான பாலில் அரை மணி நேரம் ஊற வைத்து, பின் சோப் போட்டு அலசினால் கறைபோய்விடும்.

* மேஜை ட்ராயரின் இரு ஓரங்களிலும் சிறிது மெழுகு அல்லது சோப்பைத் தட வினால் எப்போதும் சிரமமில்லாமல் திறந்து மூடலாம்.

Tags :
× RELATED சினிமா பாட்டு பிடித்தாலும் கர்நாடக இசைதான் என் சாய்ஸ்!