கொடைக்கானலில் கோடை விழா கொண்டாட்டம் கோலாகலம்!: பூத்துக் குலுங்கும் பல வண்ண மலர்களை கண்டு சுற்றுலாப் பயணிகள் உற்சாகம்..!!

நீலகிரி: மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் கோடை விழாவின் ஒரு பகுதியாக 59வது மலர் கண்காட்சி இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. கோடையை கொண்டாடும் விதமாக கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் 2 ஆண்டுகளுக்கு பிறகு மலர் கண்காட்சி களைகட்ட தொடங்கியுள்ளது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மலர் கண்காட்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, மதிவேந்தன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தத்ரூபமான மலர் சிற்பங்களையும், மலர்களையும் கண்டு ரசித்தனர். 6 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை காண சுற்றுலா பயணிகள் கொடைக்கானலில் குவிந்துள்ளனர்.

பூங்கா முழுவதும் 25 வகைகளுக்கும் மேலான செடிகளில் பல வண்ண மலர்கள், பூத்து குலுங்கும் மலர்கள் பார்வையாளர்களை பரவசப்படுத்துகின்றன. குறிப்பாக மலர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள பறவைகள், சிங்கம், ஸ்பைடர் மேன், திருவள்ளுவர் உள்ளிட்ட ரூபங்கள் சுற்றுலாப் பயணிகளை மெய்மறந்து ரசிக்க வைக்கிறது. சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 3 ஆயிரம் தொட்டி செடிகளும், வெளிநாட்டு மலர்களும் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. கொடைக்கானல் கோடை விழாவில் கலை நிகழ்ச்சிகளும், படகு போட்டிகளும் இடம்பெற உள்ளதால் சுற்றுலாப் பயணிகள் குதூகலத்தில் உள்ளனர்.

Related Stories: