ஓட்டலில் ரூம் போட்டு சரக்கு அடித்துவிட்டு 40 வயது காதலியுடன் 61 வயது முதியவர் ‘செக்ஸ்’: திடீரென மூச்சு நின்று போனதால் மரணம்

மும்பை: மும்பையில் ஓட்டல் ஒன்றில் தனது 40 வயது காதலியுடன் செக்ஸ் வைத்துக் கொண்ட 61 வயது முதியவருக்கு, திடீரென மூச்சு நின்று போனதால் இறந்தார். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம் வொர்லி பகுதியில் வசிக்கும் 61 வயது தனியார்  நிறுவன ஊழியர், தனது காதலியான 40 வயது பெண்ணுடன் புறநகரான குர்லாவில் உள்ள  ஓட்டலுக்கு சென்றார். இவர்கள், அந்த ஓட்டலில் ரூம் எடுத்து  தங்கியிருந்தனர். இந்நிலையில் நேற்று இருவரும் ஓட்டல் ரூமில் உல்லாசமாக இருந்த போது, திடீரென 61 வயது முதியவர் மயக்கமடைந்தார். அதிர்ச்சியடைந்த அவரது காதலி, ஓட்டலின் வரவேற்பு அறை போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டார்.

அவர்கள் அறைக்கு வந்து பார்த்த போது, முதியவர் அரைகுறை ஆடையுடன் கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள், அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் மருத்துவர்கள் முதியவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த தகவலை ஓட்டல் நிர்வாகத்தினர் போலீசுக்கு தெரிவித்தனர். அவர்கள் 61 வயது முதியவரின் சடலத்தை கைப்பற்றி, அந்த பெண்ணிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுகுறித்து குர்லா காவல் நிலைய அதிகாரி கூறுகையில், ‘திங்கள்கிழமை காலை ஓட்டல் ரூமில் 61 வயது முதியவரும், அவரது காதலியும் இருந்துள்ளனர். அப்போது மது போதையில் இருந்த முதியவர், அந்த பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். திடீரென மூச்சு திணறிய அவர், மயக்கமடைந்தார். அதிர்ச்சியடைந்த அந்த ெபண், ஓட்டல் ஊழியர்களிடம் தொடர்பு கொண்டார்.

மருத்துவமனைக்கு கொண்டு சென்றும், அவரை காப்பாற்ற முடியவில்லை. முதற்கட்ட தகவல்களின் அடிப்படையில், திடீர் விபத்து இறப்பாக வழக்கு பதிவு செய்துள்ளோம். மேலும் முதியவரின் மரணத்திற்கான சரியான காரணத்தை அறியவும், உடலுறவுக்கு முன்னர் அவர் ஏதேனும் பாலியல் ஊக்க மாத்திரையை உட்கொண்டாரா? என்பதைக் கண்டறியவும், அவரது மருத்துவ அறிக்கைக்காக காத்திருக்கிறோம்’ என்று அவர் கூறினார்.

Related Stories: