பிச்சையெடுத்து சேர்த்து வைத்த ரூ.71,000 மூதாட்டியிடம் ஒப்படைப்பு: டாக்டர், ஆம்புலன்ஸ் டிரைவருக்கு பாராட்டு

செங்கல்பட்டு: மயங்கி கிடந்த மூதாட்டியை சிகிச்சைக்கு  அழைத்து சென்றபோது  பிச்சையெடுத்து சேர்த்து வைத்திருந்த ₹71 ஆயிரத்தை அவரிடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம் செம்மஞ்சேரி பகுதி வசித்து வருபவர் அமுதா (70). பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகிறார். இவர், நேற்று செம்மஞ்சேரி சாலையோரத்தில் மயங்கிகிடந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் மூதாட்டியை மீட்டு  சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார்.

 மூதாட்டி பிச்சை எடுத்து பையில் வைத்திருந்த ₹71426 கீழே விழுந்துள்ளது. இதை பார்த்து ஆம்புலன்ஸ் டிரைவர் அன்புராஜ், மருத்துவ உதவியாளர் மணிகண்டன் ஆகியோர் பணத்தை பாதுகாப்பாக எடுத்து வைத்தனர். சிகிச்சைக்கு பிறகு மயக்கம் தெளிந்து மூதாட்டி, தனது பை குறித்து கேட்டுள்ளார். இதையடுத்து எடுத்து வைத்திருந்த பணத்தை டிரைவர் அன்புராஜும், மருத்துவ உதவியாளர் மணிகண்டனும் மூதாட்டி அமுதாவிடம் ஒப்படைத்தனர்.  மூதாட்டியிடம் பணத்தை ஒப்படைத்த இருவரையும் மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்கள் பாராட்டினர்.

Related Stories: