இயங்காத தானியங்கி சிக்னல்கள் வாகன ஓட்டிகள் கடும் அவதி

பொள்ளாச்சி :  பொள்ளாச்சி நகரில் மக்கள் நடமாட்டம் மற்றும் பகல், இரவு  என தொடர்ந்து போக்குவரத்து மிகுந்த இரு பஸ்நிலையம் மத்தியில் உள்ள டிராபிக் சிக்னல் பகுதி, கோவைரோடு காந்திசிலை பகுதி, தேர்நிலை உள்ளிட்ட பல இடங்களில் உயர்மின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. மாலை நேரத்தில் மின் கோபுரம் ஒளிர்கிறது. பின்னர் மறுநாள் அதிகாலை அணைக்கப்படுகிறது  மேலும், போக்குவரத்து அதிகமுள்ள முக்கிய இடங்களில், வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்தும் விதமாக, டிரைவர்கள் விதிமுறைகளை கையாண்டு வாகனங்களை இயக்குவதற்கு வசதியாக, ஆங்காங்கே தனியங்கி சிக்னல்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ஆனால், சில இடங்களில் உள்ள தானியங்கி சிக்னல்கள் இன்னும் செயல்படாமல் உள்ளது.

 இதில், வாகன போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த கோவைரோடு ரவுண்டானா அருகே உள்ள சந்திப்பு, நல்லப்பா தியேட்டர் அருகே உள்ள சந்திப்பு உள்ளிட்ட சில இடங்களில் அமைக்கப்பட்ட தானியங்கி சிக்னல்கள் முறையாக இயங்குவதில்லை. இதனால், இரவு நேரத்தில் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், சிக்னல் செயல்பாடு இல்லாததையறிந்து, விரைந்து செல்கின்றனர். இதனால், விபத்து நேரிட வாய்ப்புள்ளது. எனவே, நகரில், ஆங்£கங்கே ஏற்படுத்தப்பட்டுள்ள சிக்னல்களை முறையாக பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: