காங்கிரசின் மீட்சி பயணம்: 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலுக்காக 3 குழுக்களை அமைத்தது காங்கிரஸ்..!

டெல்லி: தேர்தல் வியூகம் அமைக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தலைமையில் 8 பேர் கொண்ட அரசியல் விவகார குழு அமைக்கப்பட்டுள்ளது. 2024ம் ஆண்டு நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்காக தற்போதே காங்கிரஸ் கட்சி தயாராகி வருகிறது. இதற்காக அண்மையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிந்தனை அமர்வு என்ற ஒரு கூட்டத்தை காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி தலைமையில் 3 நாட்கள் கட்சி தலைமை நடத்தியது. இதன் அடிப்படையில் அந்த 3 நாள் கூட்டத்தில் பல்வேறு விஷயங்கள் குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அதன் அடிப்படையில் தற்போது 2024ம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் அரசியல் விவகாரங்கள் குழு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையில் தற்போது அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் ராகுல் காந்தி, மல்லிகா அர்ஜுன கார்கே, கே.சி.வேணுகோபால் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். அதே போன்று பொதுத்தேர்தலுக்கான செயல்பாட்டு குழு என்ற ஒரு குழுவையும் காங்கிரஸ் அமைத்தது. இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் ப.சிதம்பரம் இடம்பெற்றுள்ளார். இதிலும் கே.சி.வேணுகோபால், பிரியங்கா காந்தி, அஜய் மக்கான் , உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.

அதே போன்று ஏற்கனவே அறிவித்தது போன்று காந்தி ஜெயந்தி அன்று நடைபெறக்கூடிய காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை தொடங்க இருக்கக்கூடிய பாரத் ஜோரா யாத்திரை என்ற யாத்திரைக்கான திட்டமிடலுக்கான குழுவையும் காங்கிரஸ் தலைமை அறிவித்தது. இந்த குழுவில் தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி உள்ளிட்டோர் உடம்பெற்றுள்ளனர். மேலும் அதே போன்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத் உள்ளிட்டோருக்கும் இந்த 3 குழுவில் இடம் வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: