போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினுடன் தனி ஆளாக பேச்சுவார்த்தை நடத்த தயார்: உக்ரைன் அதிபர் அறிவிப்பு

கீவ் : போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய அதிபர் புதினுடன் தனி ஆளாக பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் நடைபெற்ற உலக பொருளாதார கூட்டமைப்பு கூட்டத்தில் காணொளி மூலம் பேசிய ஜெலன்ஸ்கி, தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்காக ரஷ்யாவில் இருந்து வேறு எந்த அதிகாரிகள் வந்தாலும் அதை தாம் ஏற்கப் போவதில்லை என்றும் மாறாக புடினுடன் மட்டுமே தாம் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும் உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன் தலைநகர் கீவ்வில் புறநகர் உள்ளிட்ட ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் கூட்டம் கூட்டமாக பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என்று ஜெலன்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இதனாலேயே 2 நாடுகளுக்கு இடையே யான பேச்சுவார்த்தை பயனற்றுப் போய்விட்டது என்று ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி 24ம் தேதி நடத்திய தாக்குதல் தற்போது வரை நீடிக்கிறது. உக்ரைனின் மரியுபோல் நகரத்தை சில வாரங்கள் முன்பு ரஷ்யா முற்றிலும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டது. இதில் பல ஆயிரம் பேர் கொல்லப்பட்ட நிலையில், புடினுடன் பேச தயார் என்று ஜெலன்ஸ்கி அறிவித்துள்ளார்.

Related Stories: