வேலூர், திருவண்ணாமலை உட்பட 4 மாவட்டங்களில் கண்காணிப்பு பணிக்கு கூடுதலாக 300 காலர் கேமரா-போலீசார் தகவல்

வேலூர் : வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் கண்காணிப்பு பணிக்கு கூடுதலாக 300 காலர் கேமரா வர உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.  

தமிழகத்தில் சாலைமறியல், ஆர்பாட்டங்கள் உள்ளிட்ட பிரச்னைகளின் போது அங்கு முதலில் போலீசார் சென்று பாதுகாப்பு கொடுப்பதோடு, சட்டம்-ஒழுங்கை காப்பாற்ற வேண்டும். அதோடு, அப்பகுதியை அமைதி நிலைக்கு கொண்டு வர வேண்டும். இதுபோன்ற சமயங்களில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார் சில இடங்களில் தாக்குதலுக்கு உள்ளாவதும், போலீசார் பிரச்னைக்குரிய நபர்களை தாக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

இதில் உண்மை நிலை சில நேரங்களில் மறைக்கப்படுகிறது. ஆர்ப்பாட்டம், சாலை மறியல், வாகன சோதனை உள்ளிட்ட பிரச்னைகளின் போது, சம்பவ இடத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் படம் பிடித்து காட்டும் விதமாக காலர் கேமரா அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த கேமராக்களை போலீசார் தங்களது தோள்பட்டையில் பொருத்திக்கொண்டு பிரச்னைக்குரிய இடங்களில் சென்று வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தும்போது, அங்கு நடைபெறும் நிகழ்வுகள் உண்மை மாறாமல் படம் பிடித்துக்கொள்ளும்.

இந்த காலர் கேமராவின் சிறப்பு, பதிவு செய்துவிட்டால் அதனை அழிக்க முடியாது. தற்போது, ​வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் சுமார் 120 காலர் கேமராக்கள் போலீசாரால் பயன்படுத்தப்படுகின்றன.திருவண்ணாமலையில் 150 கேமராக்களும், வேலூரில் 118 கேமராக்களும், ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூரில் தலா 25 கேமராக்களும் வரவழைக்க ஏற்பாடு செய்துள்ளனர். காலர் அல்லது பாக்கெட்களில் க்ளிப் செய்யக்கூடிய சிறிய சாதனம்.  பேட்டரிகள் 6 முதல் 8 மணி நேரம் நீடிக்கும், இதில் மோசமான வெளிச்சத்தில் வீடியோக்களை பதிவு செய்யலாம் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: