வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சில குழுக்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க கோரி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்..!!

கடலூர்: வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சில குழுக்களிடம் இருந்து பாதுகாப்பு அளிக்க கோரி சிதம்பரம் நடராஜர் கோயில் தீட்சிதர்கள், குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார்கள். சிதம்பரம் நடராஜர் கோயில் பொது தீட்சிதர்கள் குடியரசுத் தலைவர், பிரதமர்,  உள்துறை அமைச்சர், உள்துறை, தமிழக ஆளுநர், முதலமைச்சர், தலைமைச் செயலாளர், கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்டோருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர். அந்த கடிதத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, பொது தீட்சிதர்கள் கோயிலை நிர்வகித்து வருவதாகவும், தங்கள் சமய உரிமைகள், கடமைகள் ஆகியவை அரசியல் சாசனம் பிரிவு 26 மூலம் பாதுகாக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

கடந்த 17ம் தேதி கனகசபை மண்டபத்தின் மீது ஏறி பக்தர்கள் தரிசனம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி அரசாணை பிறப்பித்ததாகவும், அதற்கு அமைதியான முறையில் ஆட்சேபனை தெரிவித்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர். எனினும் சில குழுவினர் கனகசபை மண்டபத்தின் மீது ஏறி எங்கள் மதக்கடமைகளுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார். விஷம பிரச்சாரத்தை பரப்பும் சிலரால் தங்கள் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். நடராஜர் கோயிலில் அமைதியான சூழல் நிலவ விரும்புவதாக குறிப்பிட்டுள்ள தீட்சிதர்கள், தங்கள் நம்பிக்கைகள் மற்றும் கடமைகளுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

Related Stories: