சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம்!: கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைக்க முயன்ற பாதுகாப்பு படை..கல்வீச்சால் பரபரப்பு..!!

சூடான்: சூடானில் ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் மீது ராணுவம் அடக்கு முறையை கையாண்டதால் சில இடங்களில் கலவரம் வெடித்தது. ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான சூடானில் 2019ம் ஆண்டு அதிபர் ஓமரல் பக்சேவின் சர்வாதிகார ஆட்சி, மக்கள் கிளர்ச்சி காரணமாக அகற்றப்பட்டது. இதையடுத்து புதிய அரசை அமைக்க ஜனநாயக ரீதியிலான வழிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்ட நிலையில், ராணுவம் அதிகாரத்தை கைப்பற்றியது. இதற்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் தலைநகர் கார்டோ மற்றும் ஓம்டர்மன் நகரங்களில் மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். அவர்களை பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி கலைத்தனர். இதனால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள், பதிலுக்கு பாதுகாப்பு படையினர் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஒருபக்கம் கலவரம் வெடித்தாலும், நகரின் பிற பகுதிகளில் மக்கள் அமைதியான வழியில் கொடிகளை ஏந்தி பேரணி நடத்தினர். அப்போது ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.

Related Stories: