ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்: 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் குற்றசாட்டு

மதுரை: திருமங்கலம் அருகே 100 நாள் வேலை திட்டத்திற்காக அடையாள அட்டையை புதுப்பிக்க லஞ்சம் கேட்பதாக கூறி  ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முன்னுற்றுக்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. கள்ளிகுடி ஊராட்சி ஒற்றியக்கு உற்பட்ட ஸ் வெள்ளாளக்குளம் சுந்தரக்குண்டு, கிராமங்களில் தேசிய ஊராட்சி  வேலை வாய்ப்பு திட்டத்தின் கண்மாய் சுத்தம் செய்து. மரம் கன்றுகள் நடும் பணிகள் நடைபெற்று வருகின்றது,

 அதில் பணிபுரியும் கிராம மக்களுக்கு அடையாள அட்டையை புதுப்பிக்க  ரூ. 500 வரை லஞ்சம் தர வேண்டும் என கட்டாய படுத்துவதாக கூறி ஏராளமான பெண்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர், 100 நாள் வேலை உறுதி திட்டத்தில் முறைகேடு நடப்பதாக குற்றம் சாடிய கிராம மக்கள் பணிபுரியும் பெண்களே ஊராட்சி செயலாளர் தகாத வார்த்தைகளால் திட்டுவதால் புகார் கூறினார். வேலை உறுதி திட்டத்தில் முறைகேட்டில் ஈடுபடும்  ஊராட்சி  செயலாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலிவுறுத்திய கிராமத்தினர், இல்லாவிட்டால் அடுத்தகட்ட போராட்டத்தில் ஈடுபடுபட முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

Related Stories: