மேட்டூர் அணையை இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார்!!

சேலம் : குறுவை சாகுபடிக்காக சேலம் மாவட்டம் மேட்டூர் அணையை  இன்று முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைக்கிறார். வழக்கமாக ஜூன் மாதத்தில் திறக்கப்படும் நிலையில் முதல் முறையாக மே மாதத்திலேயே அணை திறக்கப்படுகிறது. நமது நாடு சுதந்திரம் அடைந்தது முதல், குறுவை சாகுபடிக்காக நீர் திறந்து விடப்படும் நாளாகிய ஜூன் 12ஆம் நாள் அல்லது அதற்கு முன்பாக, தொடர்ந்து மூன்று ஆண்டுகள் நீர் திறந்து விடப்படுவது இது இரண்டாவது முறையாகும். இதனால், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மயிலாடுதுறை கரூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, மற்றும் கடலூர் ஆகிய காவிரி டெல்டா பகுதி மாவட்டங்களில் குறுவை சாகுபடியில் நான்கு லட்சம் ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும்.

Related Stories: