ஆஸ்திரேலிய பிரதமராக அல்பானீஸ் பதவியேற்பு

கான்பெரா: ஆஸ்திரேலிய நாட்டின் புதிய பிரதமராக  அந்தோணி அல்பானீஸ் நேற்று பதவியேற்றார்.ஆஸ்திரேலியாவில் பிரதமரை தேர்வு செய்வதற்காக நடைபெற்ற பொதுத் தேர்தல் லிபரல் கட்சி தலைவர் ஸ்காட் மோரிசன் மற்றும் தொழிலாளர் கட்சி தலைவர் அந்தோணி அல்பானீஸ் இடையே கடும் போட்டி நிலவியது. வாக்கு எண்ணிக்கை முடிவில்  அல்பானீஸ் தலைமையிலான தொழிலாளர் கட்சி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து புதிய பிரதமராக அந்தோணி அல்பானீஸ் (59) தேர்வு செய்யப்பட்டார்.  கான்பெராவில் உள்ள அரசு இல்லத்தில் அவர் நாட்டின் பிரதமராக பதவியேற்றார்.

அந்தோணி அல்பானீஸ் நியூ சவுத் வேல்ஸ் பகுதியை சேர்ந்தவர். 1996ம் ஆண்டு ஆஸ்திரேலிய நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். தொடர்ந்து அமைச்சர், அவைத்தலைவர் உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை கவனித்துள்ளார். இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் 31வது  பிரதமராக  பொறுப்பேற்றுக் கொண்ட அவர், குவாட் உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தனி விமானம் மூலம் நேற்று டோக்கியோ புறப்பட்டு சென்றார்.

Related Stories: