பிலிப்பைன்சில் தீப்பிடித்து எரிந்த பயணிகள் படகு: 7 பேர் பலி

மணிலா: பிலிப்பைன்சில் பயணிகள் படகு தீப்பிடித்து எரிந்த விபத்தில் 7 பேர் தீயில் கருகி பலியாகினர். கடலில் தத்தளித்த 120 பயணிகளை மீட்புப் படையினர் பாதுகாப்பாக மீட்டனர்.பிலிப்பைன்ஸ் நாட்டில் பொலிலியோ தீவிலிருந்து கசோன் மாகாணத்தில் உள்ள ரியல் நகரத்தில் உள்ள துறைமுகத்தை நோக்கி மெர்கிராப்ட்-2 படகு சென்று கொண்டிருந்தது. அந்த படகில் 134 பேர் பயணம் செய்தனர். அப்போது படகின் இயந்திரத்தில் திடீரென கோளாறு ஏற்பட்டு தீ பிடித்தது. இந்த தீ, படகு முழுவதும் மளமளவென பரவியது. இதனால் ஏற்பட்ட கரும்புகை காரணமாக பலருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தனர்.

இந்த விபத்தில் 7 பேர் தீயில் கருகி பாிதாபமாக உயிாிழந்தனர். உயிர் தப்பிக்க கடலில் குதித்து தத்தளித்த 120க்கு மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். விபத்து குறித்து தகவலறிந்து அங்கு விரைந்து வந்த துறைமுக அதிகாாிகள் படகில் இருந்தவா்களை வேறு படகுகள் முலம் மீட்டு கரைக்கு அழைத்து சென்றனர். இந்த தீ விபத்தில் 4 பேரை காணவில்லை என அதிகாரிகள் தொிவித்தனா்.

Related Stories: