பாட்டியாலா மருத்துவமனையில் சித்துவுக்கு பரிசோதனை

சண்டிகர்: மருத்துவ பரிசோதனைக்காக பாட்டியாலாவில் உள்ள மருத்துவமனைக்கு பஞ்சாப் மாநில நவ்ஜோத் சிங் சித்து அழைத்து வரப்பட்டார். பஞ்சாப்பில் கடந்த 1988ம் ஆண்டு  சாலையில் நடந்த சண்டையில், ஒருவரை காயப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுக்கு, ஓராண்டு சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, பாட்டியாலா மத்திய சிறையில்  அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், மருத்துவ காரணங்களுக்காக சிறப்பு உணவுகள் எடுத்துக்கொள்ள அனுமதி கோரி பாட்டியாலா நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் சித்து மனு தாக்கல் செய்து இருந்தார். சித்துவிடம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்யுமாறு மருத்துவர் குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, சித்துவுக்கு நேற்று பரிசோதனை நடத்தப்பட்டது.  மருத்துவர் குழு  என்ன சிறப்பு உணவு தேவை என்பதை பார்க்கும், பின்னர் உள்ளூர்  நீதிமன்றத்தில் அதன் அறிக்கையை சமர்ப்பிக்கும். சித்துவுக்கு தமனியில் அடைப்பு, கல்லீரல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: