உலகம் முழுவதும் 10 கோடி பேர் அகதிகளாகினர்: ஐநா அதிர்ச்சி தகவல்

பெர்லின்: வரலாற்றில் முதல் முறையாக, உலகளவில் அகதிகளின் எண்ணிக்கை 10 கோடி ஆக அதிகரித்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.இதுகுறித்து, ஐநாவின் அகதிகளுக்கான ஆணையர் பிலிப்போ கிராண்டி கூறுகையில், ‘‘எத்தியோப்பியா, பர்கினோ பாசோ, மியான்மர், நைஜீரியா, ஆப்கானிஸ்தான், காங்கோ நாடுகளில் ஏற்பட்ட வன்முறை, குழுக்களிடையேயான மோதல்களால் கடந்த ஆண்டு இறுதியில் உலகளவில் அகதிகள் எண்ணிக்கை 9 கோடி என இருந்தது. தற்போது, உக்ரைனில் நடந்து வரும் போரால் இதுவரை இல்லாத அளவில்  10 கோடி ஆக அதிகரித்துள்ளது.

10 கோடி என்பது உலக மக்கள் தொகையில் 1 சதவீதம் ஆகும். இதில் அகதிகள் மட்டுமில்லாமல் வன்முறைகள், மனித உரிமை மீறல்கள், அடைக்கலம் கோருவோர் மற்றும் உள்நாட்டில் இடம் பெயர்ந்துள்ளவர்களும் அடங்கும். 53.2 சதவீதத்தினர் சொந்த நாட்டிலேயே அகதிகளாக உள்ளனர். உக்ரைன் போரில் வீடு, உடமைகளை இழந்தவர்களுக்கு மனிதாபிமான ரீதியில் பல நாடுகள்  உதவி அளிக்கின்றன. இது  உற்சாகம் அளிக்கும் வகையில் உள்ளது’’ என்றார்.

Related Stories: