12 ஆண்டுகளுக்கு பின் மதுரை-தேனி ரயில் சேவை நாளை மறுநாள் தொடக்கம்: பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்

தேனி: மதுரை - தேனி ரயில் சேவை 12 ஆண்டுகளுக்கு பின் நாளை மறுநாள் தொடங்க உள்ளது. பிரதமர் மோடி காணொலி மூலம் துவக்கி வைக்கிறார்.மதுரை - போடி அகல ரயில் பாதை பணி கடந்த 2011ம் ஆண்டு துவங்கி நடந்து வருகிறது. ரூ.450 கோடியில் 98 கிமீ மீட்டர்கேஜ் பாதை, அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டு வருகிறது. மதுரையில் இருந்து  தேனி வரை பணிகள் முழுமையாக நிறைவடைந்தது.

நாளை மறுதினம் (மே 26)  பிரதமர் மோடி, மதுரையில் இருந்து தேனி வரை பயணிகள் ரயிலை காணொலி மூலம் சென்னையிலிருந்து துவக்கி வைக்க உள்ளார். 12 ஆண்டுக்கு பின் ரயில் சேவை துவங்க உள்ளதால் தேனி மாவட்ட மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: