விளையாட்டு வீரர்களுக்கு செல்போன் செயலி: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: விளையாட்டு மேம்பாட்டு ஆணைய செயலியை காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் ஆடுகளம் செயலி (TN Sports) விளையாட்டு செய்திகளை தெரிந்து கொள்வதற்கும், விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்வதற்கும், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இந்த செயலியை பதிவேற்றம் செய்து பயன் அடையலாம்.

இந்த செயலியில் தங்களது பெயர், இ மெயில் முகவரி, செல்போன் எண், பிறந்த தேதி, ஆதார் எண் ஆகிய விவரங்களை குறிப்பிட்டு இலவசமாக பதிவு செய்து கொள்ளலாம். விளையாட்டு துறை சார்ந்த அறிவிப்புகள், விளையாட்டு போட்டிகளில் பங்கு பெறுவதற்கான முன்பதிவு செய்யலாம். விளையாட்டுத் துறையின் பயன்களை பெறுவதற்கு இச்செயலி மிகவும் பயனுள்ளதாக அமையும்.எனவே காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள், பொதுமக்கள், அனைவரும் TN Sports ஆடுகளம் எனும் செயலியை செல்போனில் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: