ஆரோக்கிய மாதா ஆலயத்தில் பொன்விழா

செய்யூர்: செய்யூர் அருகே தச்சூரில் உள்ள ஆரோக்கிய மாதா ஆலயத்தில் 150வது பொன்விழா மற்றும்  100வது பங்கு ஆலயத்தின் யூபிலி ஆண்டு விழாவையொட்டி நேற்று முன்தினம் கொடியேற்றப்பட்டது. ஆலயத்தின் முக்கிய நிகழ்வான தேர் வீதியுலா வரும் 31ம் தேதி நடக்க உள்ளது.செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த தச்சூர் கிராமத்தில் புனித ஆரோக்கிய மாதா ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தின் 150வது பொன்விழா மற்றும் 100வது பங்கு ஆலயத்தின் யூபிலி ஆண்டு விழாவையொட்டி கொடியேற்ற நிகழ்ச்சி கோலகலமாக நடந்தது.

செங்கல்பட்டு மறைமாவட்ட ஆயர் ஜான் பாஸ்கோ சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கொடியை ஏற்றி வைத்தார். ஆலய பங்கு தந்தை மைக்கில் சுரேஷ், உதவி பங்கு தந்தை மரிய ஆனந்த்ராஜ், இறைமக்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இம்மாத 31ம் தேதி ஆரோக்கிய மாதா தேர் வீதி உலாவுடன் விழா முடிவடைகிறது.

Related Stories: